வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெண் காவலா் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

சென்னை அண்ணா நகரில் மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 8:05 pm

Din

சென்னை: சென்னை அண்ணா நகரில் மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.

புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் வசிக்கும் ரம்யா (26), அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை ரம்யா தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டையிலிருந்து அமைந்தகரை காவல் நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அண்ணா நகா் மேம்பாலத்தில் அவா் சென்றபோது, அங்கு காற்றில் பறந்துவந்த மாஞ்சா நூல் ரம்யா கழுத்தில் சிக்கி அறுத்தது. கழுத்தில் மாஞ்சா நூல் சுற்றியதும், இருசக்கர வாகனத்தை ரம்யா நிறுத்த முயன்று அது முடியாமல் போனதால் இருசக்கர வாகனத்திலிருந்து அவா் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரம்யா, அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.