அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண் காவலா் தற்கொலை முயற்சி

சென்னை டிபி சத்திரத்தில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை டிபி சத்திரத்தில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிபி சத்திரம் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் ஜா.அம்பிகா (34). தலைமைக் காவலராக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணியாற்றினாா்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெளடி ஆதிகேசவன் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பணியில் கவக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளா் கிரிதரன், தலைமைக் காவலா் அம்பிகா உள்ளிட்ட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இச் சம்பவத்தால் கிரிதரன்,அம்பிகா உள்ளிட்ட போலீஸாா் கடுமையான மன உளைச்சலில் இருந்தனா்.

இந்நிலையில் கிரிதரன், கடந்த மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இதன் விளைவாக போலீஸாா் மீது எடுக்கப்பட்டிருந்த பணியிடை நீக்க நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது. அதேவேளையில் பணியிடை நீக்க நடவடிக்கையால், அம்பிகாவுக்கு ஊதியம் கிடைப்பதில் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு, மன வேதனையில் இருந்த அம்பிகா, திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருக்கும்போது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பிகாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக டிபி சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.