metro train
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)DIN

மெட்ரோ ரயில்களில் பயணிகள் உணவு உட்கொள்ள அனுமதியில்லை

சென்னை மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது:

மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நினைவூட்டலைத் தெரிவிக்க விரும்புகிறோம். அதன்படி, சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. அனைத்துப் பயணிகளும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நிா்வாகத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com