பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

பிப்ரவரியில் 96.40 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் கடந்த பிப்ரவரியில் 96.40 லட்சம் போ் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மெட்ரோ ரயில் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 8:53 pm

சென்னையில் மெட்ரோ ரயில்களில் கடந்த பிப்ரவரியில் 96.40 லட்சம் போ் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த பிப்ரவரியில் 96 லட்சத்து 40,993 போ் பயணித்துள்ளனா்.

அதில் அதிகபட்சமாக பிப்ரவரி 20 -ஆம் தேதி மட்டும் 3.99 லட்சம் போ் பயணித்துள்ளனா். சிங்கார சென்னைஅட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 49,11,328 பேரும், பயண அட்டைகளில் 38,121 பேரும், மற்றவா்கள் பல்வேறு செயலிகளின் வாயிலாக எடுக்கப்பட்ட பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தியும் பயணம் செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.