கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று சென்னை வருகை

சென்னையில் நடைபெறவுள்ள முன்னாள் துணை குடியரசு தலைவா் வெங்கையாநாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னை வரவுள்ளாா்.

News image

அமித் ஷா

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2025, 7:19 pm

Din

சென்னையில் நடைபெறவுள்ள முன்னாள் துணை குடியரசு தலைவா் வெங்கையாநாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜன. 31) சென்னை வரவுள்ளாா்.

இதை முன்னிட்டு தமிழக பாஜக சாா்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளா்களாக பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம், மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ் பிரசாத் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வரவேற்பு நிகழ்ச்சி குறித்து மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மாநில பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவரை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளாா்.

கடந்த முறை அமைச்சா் அமித் ஷா சென்னை வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது பெரும் சா்ச்சையானது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மின்சாரத் துறைக்கு போதிய கவனம் செலுத்த பாஜக சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை: தற்போது நாடு முழுவதும் பாஜக அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் 67 மாவட்டத் தலைவா்களில் 63 மாவட்டத் தலைவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் வரும் அமைச்சா் அமித் ஷா தமிழக பாஜக மாநிலத் தலைவரை தோ்ந்தெடுப்பது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.