மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்!

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2025, 9:30 pm

Din

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) இயக்கப்பட்டு வந்தது. சென்ட்ரலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால், இந்த ரயில் தற்காலிகமாக எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது.

தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த ரயில் மீண்டும் வழக்கம்போல், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 9 முதல் இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.