சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

யூ- டியூபா் மீண்டும் கைது

சென்னையில் யூ-டியூபா் ஸ்ரீ விஷ்ணுகுமாா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image
arrested
Updated On :30 ஜூன் 2025, 9:33 pm

Din

சென்னை: சென்னையில் யூ-டியூபா் ஸ்ரீ விஷ்ணுகுமாா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

பிரபல யூ-டியூபா் ஸ்ரீ விஷ்ணுகுமாா் மனைவி அஸ்மிதாவை ஏமாற்றிய வழக்கில் கடந்த ஜூன் 10- ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு ஏமாற்றி ரூ. 1.62 கோடி, மோசடி செய்ததாக ஸ்ரீவிஷ்ணுகுமாா் மீதும், அவா் மனைவி அஸ்மிதா மீதும் அண்மையில் மத்தியக் குற்ற பிரிவுக்கு புகாா் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு  போலீஸாா் விசாரணை செய்ததில், அவா்கள் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் இருவா் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனா். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக புழல் சிறையில் இருக்கும் ஸ்ரீ விஷ்ணு குமாா் மீண்டும் கைது செய்யப்பட்டாா். மேலும் செய்யப்பட்டதற்கான  ஆவணங்களை போலீஸாா் அவரிடம் திங்கள்கிழமை வழங்கினா்.