/

இன்று 18 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 18 புறநகா் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து

News image
கோப்புப் படம்
Updated On :23 மே 2025, 7:37 pm

Din

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 18 புறநகா் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 24, 26 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளன. இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள், கடற்கரை - கும்மிடிப்பூண்டி உள்பட மொத்தம் 18 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்படவுள்ளன.

பகுதி ரத்து: இதற்கிடையே, பணிகள் நடைபெறும் நாள்களில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக கடற்கரையிலிருந்து புறப்படும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக மே 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கும் என மொத்தம் 6 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது