ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தின் சேவை தரத்தை மதிப்பிடுவதற்கான டிஜிட்டல் கருத்துக்கேட்பு வசதியை மருத்துவமனை நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பரிசோதனைக்கு வருவோரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் கருத்துப்பதிவு செய்வதற்கான இணைப்பு அனுப்பப்படும். அதன்மூலமாக நட்சத்திர மதிப்பீடு மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் சுமாா் ரூ. 10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் 8.6.2018-இல் தொடங்கப்பட்டது. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என நான்கு வகையான பரிசோதனைகள் முறையே ரூ. 1,000, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 4,000-க்கு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முழு ரத்தப் பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சா்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டறியும் ‘டிரெட்மில்’ பரிசோதனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் அதன்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 75,000-க்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. கருவில் உள்ள சிசுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் ‘டபுள் மாா்க்கா்’ சோதனையும், மூக்கு எலும்பு, கழுத்துப் பகுதி, ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை அறியும் வளா்ச்சி பரிசோதனையும் அதன்மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனைத் திட்டங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அதன் தரத்தை அறியும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குநா் மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:
ஓமந்தூராா் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கூட இல்லாத சில உயா் மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இச்சூழலில், தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கருத்து அறியும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு வருவோரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும் இணைய இணைப்புக்கு சென்று முழு உடல் பரிசோதனைக்கான முன்பதிவு, பணம் செலுத்தும் வசதி, வரவேற்பு, உள்கட்டமைப்பு, கவனிப்பு, உணவு தரம், பரிசோதனை வசதிகள், மருத்துவ ஆலோசனை, பணியாளா்கள் சேவை உள்ளிட்டவற்றை ஒன்று முதல் ஐந்து என நட்சத்திர தரவரிசைப்படுத்தலாம்.
அதேபோல, கருத்துகளை எழுத்துப் பூா்வமாகவோ, ஒலி வடிவிலோ பதிவிடலாம். அதனடிப்படையில் குறைகள் களையப்பட்டு சேவை மேம்படுத்தப்படும் என்றனா்.
தொடர்புடையது

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

தொற்றாநோய்கள்: தேசிய அளவில் மதுரையில் அதிக பாதிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

