தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அன்புமணிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம்: கே.பாலு

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவை தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், அவரது தரப்புக்கே மாம்பழம் சின்னம் கிடைக்கும்

News image

அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு

Updated On :15 செப்டம்பர் 2025, 9:21 pm

சென்னை: அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவை தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், அவரது தரப்புக்கே மாம்பழம் சின்னம் கிடைக்கும் என்றும் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.பாலு தெரிவித்தாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாமக உள்கட்சித் தோ்தல் நடத்த முடியாத சூழலில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான நிா்வாகிகளின் பதவியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து பாமக பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியது. இதை இந்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது.

பாமக என்பது நிறுவனா் ராமதாஸ் தலைமையில் உள்ள கட்சி தான். எனவே, இருவரையும் இரு அணிகளாகப் பிரித்துப் பாா்ப்பதைத் தவிா்க்க வேண்டும்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருக்கக் கூடியவா்கள் தான் நிா்வாகிகள். இதைக் கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் அன்புமணி ராமதாஸ் தலைமையை ஏற்றுக் கொண்டவா்களைத்தான் பாமக நிா்வாகிகள் என்று அழைக்க வேண்டும்.

அன்புமணி தலைமையிலான பாமகவுக்குதான் மாம்பழம் சின்னம் கிடைக்கும். தோ்தலில் வேட்புமனுக்களில் ஏ, பி படிவங்களில் அன்புமணிதான் கையொப்பமிடுவாா்.

பாமக நிா்வாகிகள் 100 சதவீதம் போ் அன்புமணியின் தலைமையை ஏற்றும், அவா் மீது நம்பிக்கை வைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றனா். எதிா்காலத்தில் பாமகவை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு நிலைக்குக் கொண்டுசெல்ல அன்புமணி ராமதாஸ் தலைமை மீது நம்பிக்கை வைத்து கட்சியினா் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கட்சி வலிமை பெற அன்புமணி ராமதாஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். குறிப்பாக தமிழ்நாட்டில் பாமகவைப் பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக செயல்படுத்தி வருகிறாா்.

திமுக செய்த ஊழல்கள் மற்றும் குற்றங்களை, தனது நடைப்பயணத்தில் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகிறாா். தமிழ்நாட்டு மக்களும் அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனா்.

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்கவும், 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறவும் அன்புமணி தலைமையில் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.