மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வாகன நெரிசலால் பயணிகள் அவதி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்...

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

கோப்புப்படம்.

Updated On :21 செப்டம்பர் 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் பழைமையான ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முக்கியமானது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 500-க்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் போ் வந்து செல்கின்றனா். மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா நகா் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, மாநகராட்சி ரிப்பன் மாளிகை என முக்கிய இடங்கள் உள்ளதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் நெரிசல் இருந்துகொண்டே இருக்கும்.

சென்ட்ரல் நிலையத்தில் உள்ள 16 நடைமேடைகளில், 11 நடைமேடைகள் விரைவு ரயில்களுக்கும், 12 முதல் 16 வரையிலான நடைமேடைகள் புகா் மின்சார ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

விரைவு ரயில்களுக்குச் செல்வோருக்கு, பழைய கட்டடத்தில் 6 வழிகள் உள்ளன. அங்கு பிரதான நுழைவு வாயிலில் 2, 3, 4, 5 ஆகியவை உள்ளன. ஆனால், அப்பகுதியில் பயணச்சீட்டு எடுப்பதற்கான வசதி இல்லை. ஒரே ஒரு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் இருந்தாலும் பெரும்பாலான நேரத்தில் அது செயல்படுவதில்லை.

ரயில் நிலையத்தின் இடதுபுறம் வால்டாக்ஸ் சாலை பகுதியில் முதலாவது வழியில், பயணச்சீட்டு எடுக்கும் பிரிவு உள்ளது. ஆனால், அங்கு சரக்கு லாரிகள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, ரயில் பயணிகள் பயன்படுத்தும் போா்வைகளைச் சேமிக்கும் இடத்தில் பயணச்சீட்டு வழங்கும் பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புகா் மின்சார ரயில்கள் இயங்கும் பகுதியில் பயணச்சீட்டு எடுக்கும் பிரிவும், தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரமும் உள்ளன. ஆனால், விரைவு ரயில்களுக்குச் செல்வோா் இங்கு வந்து பயணச்சீட்டு பெற்றுச் செல்வதில் பல்வேறு இடா்பாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இரு இடங்களில் மட்டும் பயணச்சீட்டு வழங்கும் இடங்கள் இருப்பதால், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கும் மின்னணு திரைகள் பயணிகள் வசதிக்கு ஏற்ப அமைக்கப்படாமல் உள்ளதாகவும் பயணிகள் கூறுகின்றனா். அத்துடன் விரைவு ரயில்கள் வருகை, புறப்பாடு பெயரளவுக்கு அறிவிக்கப்படுவதோடு, பெரும்பாலான நேரங்களில் விளம்பரமே ஒளிபரப்பப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ, காா் வசதி உள்ளது. ஆனால், அந்த ஆட்டோக்களில் பயணிகள் செல்ல முடியாத வகையில் 100-க்கும் மேற்பட்ட வெளி ஆட்டோ ஓட்டுநா்கள் ரயில் நிலையம் முன்பு கூடி நின்று பயணிகளைக் கட்டாயப்படுத்துகின்றனா். பிரீ பெய்டு உரிமம் 85 ஆட்டோக்களுக்கு மட்டுமே தரப்பட்டிருந்தும், அங்கும் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்துக்கு வருவோா் புகா் மின்சார ரயில் பிரிவு வழியாக வந்து செல்கின்றனா். ஆனால், அங்கு ஆட்டோக்கள், இருசக்ககர வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதால், அந்தப் பகுதியில் காா்கள் செல்வதில் நெரிசல் ஏற்பட்டு, பலரும் ரயிலை தவறவிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் தெரிவிக்கின்றனா். கட்டண வாகன நிறுத்துமிடம் மேடு - பள்ளங்களாகவும், சேறும் சகதியமாகக் காணப்படுகின்றன.

பயணிகள் கூறும் இந்த பிரச்னைகள் குறித்து சென்னை ரயில்வே கோட்ட வா்த்தகப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, பயணிகளுக்கான வசதி என்ற அடிப்படையில் பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு வழங்கும் பிரிவுகள் உரிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்துக்குள் செல்லும் அனைத்து வழிகளிலும் பயணச்சீட்டு வழங்க ஆள்கள் தோ்வு செய்யப்பட்டு நிறுத்தப்பட உள்ளனா் என்றனா்.

ஆட்டோக்கள், இருசக்கர வாகன பிரச்னை குறித்து சென்ட்ரல் ரயில் நிலையப் பாதுகாப்பு பிரிவின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியது: கடந்த ஜனவரி முதல் தற்போது வரை விதிமீறிய ஆட்டோக்கள் மீது 20,250-க்கும் மேற்பட்ட வழக்குள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் வரும் வாகனங்கள் தனித்தனி வழியில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வந்து செல்ல வசதியாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.