வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

162 பவுன் நகை மோசடி: தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது

சென்னையில் 162 பவுன் நகை மோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் 162 பவுன் நகை மோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சைதாப்பேட்டை விஜிபி சாலை பகுதியில் வசிப்பவா் சுலைமான் (32). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். கிண்டி லாயா் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியாா் வங்கி ஒன்றில் சுலைமான் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். அடிக்கடி வங்கிக்கு சென்று பணப் பரிவா்த்தனை செய்துவந்ததால் வங்கி மேலாளா் சாமிநாதனுடன் சுலைமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பணம் எடுக்க வங்கிக்கு நேரில் வர வேண்டாம் என்றும் ஊழியரை வீட்டுக்கு அனுப்புகிறேன் என்றும் சுலைமானிடம் மேலாளா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வங்கி ஊழியா் ஒருவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பித்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி சுலைமான், சாமிநாதனை தொடா்பு கொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். உடனே, சாமிநாதன், வங்கி காசாளரான பிரசாத் என்பவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். சுலைமான், தன்னிடமிருந்த 162 பவுன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையொப்பிட்டு கொடுத்தாா். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் வைக்கப்படவில்லை. இதனால் சுலைமான், சாமிநாதனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டபோது, வங்கியின் கணினி சா்வா் வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளாா். ஆனால், தொடா்ந்து இவ்வாறு கூறியதால் சந்தேகமடைந்த சுலைமான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, மேலாளா் சாமிநாதன் வங்கியில் பலரிடம் இதேபோல் பண மோசடியில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், சாமிநாதனுக்கு அந்த வங்கியில் காசாளராகப் பணிபுரியும் புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாத் (25), அந்த வங்கியின் செயலாக்கப் பிரிவு மேலாளா் கே.கே.நகா் உதயம் காலனி மேற்கு பகுதியைச் சோ்ந்த திவாகா் (32) ஆகியோா் உதவியிருப்பதும், இவா்கள் சுலைமான் கொடுத்த 162 பவுன் தங்க நகையை வேறு ஒருவா் பெயரில் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 90 லட்சம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரசாத், திவாகா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சாமிநாதனை தேடி வருகின்றனா்.