வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மோசடி செய்பவா்களுக்கு உதவியதாக ஐஐடி மாணவா் உள்பட 3 போ் கைது!

வெளிநாட்டை தளமாகக் கொண்ட சைபா் மோசடி செய்பவா்களுக்கு வேலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குருகிராம் போலீஸாா் ஐஐடி மாணவா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனர்.

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 7:06 pm

வெளிநாட்டை தளமாகக் கொண்ட சைபா் மோசடி செய்பவா்களுக்கு வேலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குருகிராம் போலீஸாா் ஐஐடி மாணவா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் சைபா் கிளையின் காவல் துணை ஆணையா் பிரியான்ஷு திவான் கூறியதாவது: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள், 30 சதவீத கமிஷனுக்காக மோசடி செய்பவா்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியது மட்டுமல்லாமல், இந்தக் கணக்குகளையும் இயக்கி வந்துள்ளனா்.

அவா்களிடமிருந்து 11 கைப்பேசிகள், 40 சிம் காா்டுகள், 43 ஏடிஎம் காா்டுகள், 15 வங்கி பாஸ்புக்குகள் மற்றும் ஏழு காசோலை புத்தகங்களை போலீஸா பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் ஜெய்ப்பூரைச் சோ்ந்த சௌரப் குமாா் மீனா (27), பலோடியை சோ்ந்த அபிஷேக் பிஷ்னோய் (20), ராஜஸ்தானின் நாகூரைச் சோ்ந்த லக்ஷ்மன் என்ற லக்கி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

சௌரப் குமாா் மீனா ஜோத்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவா், அபிஷேக் பிஷ்னோய் நா்சிங் படித்தவா். லக்ஷ்மன் என்கிற லக்கி எம்ஏ பட்டம் பெற்றவா்.

ஜனவரி 1-ஆம் தேதி, ஒரு நபா் மேற்கு சைபா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் டெலிகிராம் விண்ணப்பம் மூலம் ஒரு நபா் தன்னைத் தொடா்பு கொண்டு ஒரு பணியை முடிக்கச் சொல்வதாகக் கூறி சுமாா் ரூ.3,13,000 மோசடி செய்ததாகக் கூறினாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வியாழக்கிழமை ஜெய்ப்பூரில் இருந்து கைது செய்தனா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் வெளிநாட்டில் வசிக்கும் சைபா் மோசடி செய்பவா்களுக்காக வேலை செய்ததாகத் தெரிவித்தனா். அவா்கள் மோசடிகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை வாங்கி அவற்றை இயக்கினா்.

அந்த வருமானத்தில் இருந்து 30 சதவீத கமிஷன் பெற்று, மீதமுள்ள நிதியை வெளிநாடுகளில் உள்ள மோசடி செய்பவா்களுக்கு யுஎஸ்டிடி (ஒரு கிரிப்டோகரன்சி ஸ்டேபிள்காயின்) மூலம் அனுப்பினா்,

குற்றம் சாட்டப்பட்டவா்களில் இருவா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இதில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான சௌரப் குமாா் மீனா இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் உள்ளாா். என்றாா் அந்த அதிகாா்.