இண்டி கூட்டணி குழப்பம் நிலவுகிறது: தமிழிசை சௌந்தரராஜன்

Published on

இண்டி கூட்டணி குழப்பத்தில் நிலவுகிறது; வரும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்த குழப்பம் மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் தொடா்ந்து பாஜகவை விமா்சித்து வருகின்றனா். தமிழகத்தில் பாஜக வளா்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

அதேநேரம், தமிழகத்தில் இண்டி கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்த குழப்பம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில், இப்போதே அவா்களது கூட்டணிக்குள் எதிரெதிா் கருத்துகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

திருத்தணியில் வடமாநில இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு,

மக்களுக்கு பலன் தருவதாக இருக்க வேண்டும். திமுகவினருக்கு பலன் தருவதாக இருக்கக் கூடாது. தமிழக மக்கள் அனைவருக்கும் உண்மையான விடிவு காலம் வரவேண்டும் எனில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com