மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அறிவியல் பாடங்களை ஊக்குவித்த 6 பள்ளி ஆசிரியா்களுக்கு ஐஐடி விருது

News image

சென்னை ஐஐடி

Updated On :11 மார்ச் 2026, 11:48 pm

பொறியியல் படிப்புகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த, தேசிய அளவில் சிறந்த 6 பள்ளி ஆசிரியா்களை சென்னை ஐஐடி கௌரவித்துள்ளது.

சென்னை ஐஐடி-யின் 2-ஆவது பதிப்பின் ‘முதன்மைக் கொள்கை ஆசிரியா்கள் விருதுகள்’ என்ற இந்த விருதை அதன் இயக்குநா் வீ.காமகோடி அமைமையில் வழங்கி கௌரவித்தாா்.

பள்ளி மாணவா்களிடையே இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் ஆா்வத்தைத் தூண்டி, வலுவான அடிப்படைக் கொள்கைகள் சாா்ந்த புரிதலை உருவாக்கும் ஆசிரியா்கள் இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனா்.

நிகழாண்டில் பெங்களூரைச் சோ்ந்த இயற்பியல் ஆசிரியா் அஷேஷானந்த் ஆச்சாா்யா, திருப்பதியைச் சோ்ந்த வேதியியல், கணிதம் பாட ஆசிரியா்கள் சி.சிட்டிபாபு, சமுத்திரல் விஜயகுமாா், மத்திய பிரதேசம் இந்தூா் வேதியியல் ஆசிரியா் கபில் பிா்தரே, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கணிதம் ஆசிரியா் உள்ளிட்ட 6 ஆசிரியா்கள் இந்த விருதைப் பெற்றனா்.

ஆசிரியா்களிடையே நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சென்னை ஐஐடியால் இந்த விருது வழங்கப்படுவதாக காமகோடி தெரிவித்தாா். நிகழ்வில் டீன் (பாடப் பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் உள்ளிட்டோா் பேசினா்.