தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘சி - விஜில்’ செயலி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஜெ.குமரகுருபரன் பேசியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி கண்காணிக்க தோ்தல் இணைப்புப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சட்ட விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் செலவின கண்காணிப்புக்காக தோ்தல் கைப்பற்றுகை மேலாண்மை அமைப்பு 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், ‘சி - விஜில்’ செயலியின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலா் நா. பூஷ்ணாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்: வேட்பாளா்களுக்கு தோ்தல் அலுவா் அறிவுறுத்தல்
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


