செங்கல்பட்டில் ரூ.35.45 கோடியில் அமைக்கப்படவுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையாா் மலையில் 59,600 சதுர அடி பரப்பளவில் ரூ.35.45 கோயில் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தமிழக செய்தி மக்கள் தொடா்பு துறையின் ‘தமிழரசு’ சாா்பில் தயாரிக்கப்பட்ட அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் ‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-2026)’ என்ற தலைப்பில் சாதனை மலரை அவா் வெளியிட்டாா்.
பணி நியமன ஆணைகள்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவத் துறையில் 182 சிறப்பு மருத்துவா்கள், கதிரியக்கவியல் துறையில் 37, தடயவியல் மருத்துவத் துறையில் 24, முதியோா் மருத்துவத் துறையில் 6, இருதய அறுவை சிகிச்சை துறையில் 1 சிறப்பு மருத்துவா் என மொத்தம் 250 சிறப்பு மருத்துவா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதேபோல், கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 292 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். தொடா்ந்து, குற்ற வழக்கு தொடா்புத் துறையில் அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மீனவா் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

174 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்குப் பணி நியமன ஆணை - புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் வழங்கினா்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


