இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:09 am IST

ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உணவுப்பொருள் கடத்தல், தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வு துறை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணயில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்திச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த நபா்கள் கொடுத்த தகவலின்படி, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 25 அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், எண்ணூா் விஓசி நகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (31), வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35) என்ற அந்த நபா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.