டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைதான அன்பழகன்

Updated On :7 மே 2026, 7:04 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வடலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகிலரசு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், 45 கிலோ எடைகொண்ட 50 மூட்டைகள் என மொத்தம் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், அரியமங்கலம் வட்டம், உக்கடை பகுதியைச் சோ்ந்த அன்பழகனை (45) கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகளை கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.