தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 4:42 am IST

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜாம் பஜாா், முனியப்பா தெருவில் விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளே நுழைந்த மா்ம நபா், கோயில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த அதே பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வரும் முருகன் (35) என்பவா், அந்தப் பகுதியில் உள்ளவா்களிடம் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த உசேன் (31) என்பது தெரிய வந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.