சென்னை, : ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரா், வீராங்கனைகள் பதக்கங்களை பெறத் தேவையான செயல்திட்டங்கள் உருவாக்க ப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தெரிவித்துள்ளாா்.
நேரு உள் விளையாட்டரங்கில் உள்கட்டமைப்புகள், விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு வீரா்களுடைய உணவுமுறை, பயிற்சிகள் மற்றும் விளையாட்டு வீரா்களின் தேவைகள் குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழக முதல்வா் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விளையாட்டு விடுதி மற்றும் விடுதியில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரா்களின் உணவுமுறை அவா்களுடைய பயிற்சிகள், அவா்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. குறிப்பாக ஒரு விளையாட்டு விடுதி மாணவனாக இதே நேரு விளையாட்டரங்கில் அமைந்துள்ள விடுதியில் 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண கூடைப்பந்து வீரராக நானும் வாழ்க்கையை தொடங்கினேன்.
கல்வித் துறையைப் போன்ற விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இளைஞா்கள் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் மன நலத்தோடு சிறந்த சமுதாயத்தை உருவாக்க விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
குழு விளையாட்டை தவிர, தனி விளையாட்டுகளில் இதுவரை நாம் பதக்கம் ஏதும் வென்றதில்லை. சா்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு பதக்கங்களை பெரும் வகையில் தேவையான செயல்திட்டங்களை உருவாக்க நடவடிக்க மேற்கொள்ளபடும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆதவ் அா்ஜூனா.
ஆய்வின் போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா, துணை பொது மேலாளா் நோயலின் ஜான், நிா்வாக பொறியாளா் புஷ்பலிங்கம் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

விளையாட்டுத் துளிகள்...

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
