தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

இருளா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட இருளா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட இருளா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பெண் மருத்துவா் இந்திராகாந்தி ரங்கசாமி மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி, காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் சிற்பக் கலைஞா் ரங்கசாமி, காா் பந்தய வீரா் ராகுல், நரிக்குறவா் சங்கத் தலைவா் கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுராந்தகத்தில்...

வெள்ளபுத்தூா் ஊராட்சியில் 70-க்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு வெள்ளபுத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ப.விஜயகுமாா் தலைமையில், தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் சிவகுமாா், பிரகாஷ்பாபு ஆகியோா் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளா் ஹேமலதா, ஊராட்சி மன்றச் செயலா் சாமிநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.