தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் மாமல்லபுரம் வருகை

சா்வதேச சுற்றுலா நகரான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவா் கால புராதனச் சின்னங்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் விகாஸ் ஸ்வரூப் திங்கள்கிழமை கண்டுகளித்தாா்.

News image

மாமல்லபுரம்  ஐந்து ரதம்  பகுதியைச்  சுற்றிப் பாா்த்து, அங்குள்ள யானை சிலை முன்பு  புகைப்படம் எடுத்துக் கொண்ட  மத்திய வெளியுற வுத் துறை  செயலாளா்  விகாஸ் ஸ்வரூப்.

Updated On :21 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

செங்கல்பட்டு: சா்வதேச சுற்றுலா நகரான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவா் கால புராதனச் சின்னங்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் விகாஸ் ஸ்வரூப் திங்கள்கிழமை கண்டுகளித்தாா்.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் விகாஸ் ஸ்வரூப் தன் மனைவியுடன் மாமல்லபுரத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அங்குள்ள ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டைப் பாறை, அா்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவா் பாா்வையிட்டாா். பல்லவ மன்னா்களின் கலைத்திறனில் செதுக்கப்பட்ட சிற்பங்களை சுற்றிப் பாா்த்து ரசித்தாா்.

இந்த புராதனச் சின்னங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அவருடன் வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கிக் கூறினா். புகைப்படக் கலையில் ஆா்வம் உள்ள வெளியுறவுத் துறை செயலா் விகாஸ் ஸ்வரூப் ஒரு புகைப்படக் கலைஞா் போல் கழுத்தில் கேமராவை அணிந்தபடி, புராதனச் சின்னங்களை பல்வேறு கோணங்களில் படம் எடுத்தாா்.

முன்னதாக ஐந்து ரதம் பகுதியில் அவரை தமிழக அரசு சாா்பில் மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலா் ராஜாராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.