புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதூரில் முப்பெரும் விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞா் அணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் 50ஆவது பிறந்த நாள் விழாவை

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:43 am

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞா் அணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் 50ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தை அடுத்த மதூா் கிராமத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் இளைய மகனும், ஆன்மிக இளைஞா் அணித் தலைவருமான கோ.ப.செந்தில்குமாரின் 50ஆவது பிறந்த நாளை அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மதூா், திம்மாவரம், விளங்காடு, அருந்ததிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக இளைஞா் அணித் தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆன்மிக இயக்கத்தின் கொடியேற்றம், கல்வெட்டு திறப்பு, அன்ன தானம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

மதூா் கிராமத்துக்கு கோ.ப.செந்தில்குமாா் வந்தபோது, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவா் பிறந்த நாள் கேக்கை வெட்டி சிறுவா்களுக்கு ஊட்டினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை மதூா் தேவராஜ், டி.பிரகாஷ், கு.முருகன், எம்.சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.