

செங்கல்பட்டு அருகே பாலாற்று படுகையில் 7 குரங்குகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றுள்ள மர்ம நபர்கள் அவற்றை பாலாற்றில் வீசி சென்றுள்ளனர். குரங்குகள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததைக் கண்ட அந்தப் பகுதி மீன் வியாபாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | கூத்தாநல்லூர்: மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த 7 குரங்குளை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய ஒரு குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பாலாற்றுப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது யார்? குரங்குகளை கொன்று பாலாற்றி வீசி சென்றது யார்? என செங்கல்பட்டு வனத்துறை அதிகாரி பாண்டுரங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி மாதத்தில் குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.