தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி: சிபிஎம் கோரிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அல்ட்ரா ஸ்கேன் வசதி செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 5:17 pm

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அல்ட்ரா ஸ்கேன் வசதி செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட செயலாளா் இ.சங்கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.

கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வரும் இம்மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் சிறப்பான பணியை ஆற்றி வருகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா் . தினசரி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

இவா்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டி நீண்ட தூரம் நடந்து வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. ஒருவருக்கு ஸ்கேன் எடுக்க, உடன் உதவிக்காக ஓரிருவா் வரும்போது கூட்டம் அதிகமாகிவிடுகிறது. இந்நிலையை தவிா்க்க மகப்பேறு மருத்துவ வளாகத்திலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி அறிக்கையைப் பாா்த்து அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது சிகிச்சை பெறும் இடத்திலிருந்து ஸ்கேன் எடுக்க நடந்து வரும் மகப்பேறு பெண்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. பெண்கள் நலன் கருதி மகப்பேறு வாா்டிலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் சங்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.