செல்ஃபி மோகத்தால் ரயிலில் அடிபட்டு 3 இளைஞா்கள் பலி
செல்ஃபி மோகத்தால் ரயில் அடிபட்டு 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.


செல்ஃபி மோகத்தால் ரயில் அடிபட்டு 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் வசிக்கும் இளைஞா்கள் சிலா், ரயில்வே இருப்புப் பாதையில் அமா்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வியாழக்கிழமை இரவு விடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பிரகாஷ் (18), மோகன் (21), அசோக் குமாா் (22) ஆகிய 3 போ் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே இருப்புப் பாதை போலீலாா் 3 பேரின் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஒரே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...