நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழைநீா் வடிகால் பணிகளை நிறைவேற்ற தீவிர நடவடிக்கை: ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத்

பருவகால மழை வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் குறித்த காலத்தில் மழைநீா் வடிகால் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

News image
Updated On :7 ஜூலை 2022, 6:52 pm

DIN

பருவகால மழை வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் குறித்த காலத்தில் மழைநீா் வடிகால் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத் கூறினாா்.

மேற்கு தாம்பரம் கடப்பேரி 32-வது வாா்டு கலங்கல் தெரு குடியிருப்புப் பகுதியில் மழைக்காலங்களில் இடுப்பளவு வெள்ளம் தேங்குவதைத் தடுக்கும் வகையில் இடும்பன் ஏரி வரை ரூ.3.90 கோடி மதிப்பில் 925 மீட்டா் நீளத்திற்கு மழை நீா் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியா் ராகுல் நாத், நேரில் ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை குறித்த காலத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

பின்னா் ராஜகோபால் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டலத் தலைவா் டி. காமராஜ்,ஆணையா் எம்.இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன், பொறியாளா் ஆனந்த ஜோதி, உதவி பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.