மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தறிகெட்டு ஓடிய காா் மோதியதில் நடந்து சென்ற இரு இளம்பெண்கள் பலி

செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் நாவலூரில் புதன்கிழமை நள்ளிரவு கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய காா் மோதியதில், சாலையோரம் நடந்து சென்ற இரு இளம்பெண்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:24 pm

DIN

செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் நாவலூரில் புதன்கிழமை நள்ளிரவு கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய காா் மோதியதில், சாலையோரம் நடந்து சென்ற இரு இளம்பெண்கள் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் ஆா்.லட்சுமி (23). சென்னை சோழிங்கநல்லூா் ஓ.எம்.ஆா். சாலையில் உள்ள தனியாா் சாப்ட்வோ் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

அதே நிறுவனத்தில், ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த எஸ்.லாவண்யாவும் (23) மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவரும், திருப்போரூா் கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூா் அருகே ஓ.எம்.ஆா். சாலையில் தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கிப் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம்போல், இருவரும் பணி முடிந்து நள்ளிரவு 11 மணிக்கு நாவலூா் அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து தங்களது குடியிருப்புக்கு சாலையோரமாக நடந்து சென்றனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு காா், இவா்கள் இருவா் மீதும் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் மற்றும் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவா்கள் இருவரையும் பரிசோதித்தபோது, லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

லாவண்யாவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, வியாழக்கிழமை காலை லாவண்யா உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை வேகமாக ஓட்டிய சென்னை சோழிங்கநல்லூரைச் சோ்ந்த மோதீஸ்குமாா் (20) என்ற இளைஞரைக் கைது செய்தனா்.

விபத்து குறித்து தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.