செங்கல்பட்டில் ரௌடிகள் என்கவுண்டர் ஏன்? ஐ.ஜி. விளக்கம் 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாட்டு வெடிகுண்டுகள் வீசியத்தில் காயமடைந்த போலீஸாரை, ஐ.ஜி. சந்தோஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். 
மொய்தீன் | தினேஷ்
மொய்தீன் | தினேஷ்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாட்டு வெடிகுண்டுகள் வீசியத்தில் காயமடைந்த போலீஸாரை, ஐ.ஜி. சந்தோஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். 
 சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் உடற்கூறு ஆய்வையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அப்புகார்த்திக், மகேஷ் என்ற இருவரில் அப்பு கார்த்திக் நாட்டு வெடிகுண்டு வீசியும், சரமாரியாக வெட்டியும், மற்றொருவரை கத்தியால் வீச்சரிவாளால் வெட்டியும் கோலையாளிகளான  மாதவன், தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகியோர் கொலை செய்தனர். இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் போலீஸார் பிடிக்க முயன்ற போது இவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால்வெட்டியும் தாக்க முயன்றனர். 
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 4 ரவுண்டுகள் சுட்டதில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மாதவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.
 இந்தக் கொலைக்காக பின்னணி குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா கூறுகையில், அப்பு கார்த்திக்கின் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் காதல் இருந்துள்ளது. இதனை தினேஷ் எதிர்த்துள்ளார். அப்புகார்த்திக், மகேஷ் இருவரும் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். 
இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018-ல் ஒரு வழக்கு உள்ளது.  இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது என்றார்.
 இதை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில் ரௌடிகளிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளோம். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மாதவன் மற்றும் இந்தக் கொலையில் தொடர்புடைய ஜெசிகா என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். 

இந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருங்குன்றம் பள்ளி மாமண்டூர் பகுதியில் இருப்பதாக கொடுத்த தகவலை அடுத்து தனிப்படை ஆய்வாளர் ரவிக்குமார் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் பாதுகாப்பிற்காக ஆய்வாளர் ரவிக்குமார் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். 
 கைது செய்யப்பட்டவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து கிடைக்கிறது என்றும் விசாரித்து வருகிறோம். 
மேலும் ரவுடிகளை ஒடுக்க பழைய ரவுடிகள், கண்காணிக்கவும், தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கொலையுண்ட அப்பு கார்த்திக் மீது கொலை வழக்குகள் கொலை முயற்சி வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதேபோன்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட மகேஷ் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. என்கவுண்டரில் கொல்லப்பட்ட மொய்யதீன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் தினேஷ் மீது நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com