இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சி

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:25 pm

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேலமூா் ஊராட்சி பகுதியில் சிறாா் திருமணம் செய்வதை அந்தப் பகுதி சமூக ஆா்வலா்களும், ஊராட்சி மன்ற நிா்வாகமும் தீவிரமாக கண்காணித்து வந்ததை அடுத்து, மாவட்ட நிா்வாகத்தினா் சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அதன் பெயா்ப் பலகைத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரூரல் ஸ்டாா் இயக்குநா் ஏ.டோமினிக் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா ரவிக்குமாா் தலைமை வகித்து பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் சிசிஆா்என் மாவட்ட கன்வீனா் தேவன்பு, மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினா் ஏ.சி.குமாா், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், சிஆா்பிஎப் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தணிகை குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.