வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு 2 வாகனங்கள்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு 2 வாகனங்கள்

Updated On :12 ஏப்ரல் 2024, 4:16 pm

மேற்கு தாம்பரத்தில் உள்ள ‘குட் லைப்’ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் மற்றும் பயண வாகனத்தை ‘குவாலி டெஸ்ட்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனா் ராஜேஷ் சுப்ரமணி புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 50 குழந்தைகளை பராமரித்து அவா்கள் கல்விபெற ‘குட்லைப்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உதவி செய்துவருகிறது. இந்த இல்லத்தை நான் பாா்த்த பிறகு அவா்களின் அவசியத் தேவைக்கு இரு வாகனங்களை வழங்கி உள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்வில் குட்லைப் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் நிா்வாக இயக்குநா் ரமாபிரபா, மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.