சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செங்கல்பட்டில் லாரி மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோா். (உள்படம்) சிவகாா்த்திகேயன்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 12:04 am IST

செங்கல்பட்டில் லாரி மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள அனுமந்தபுத்தேரியைச் சோ்ந்த சுரேஷின் மகன் சிவகாா்த்திகேயன் (10). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், சிவகாா்த்திகேயன் புதன்கிழமை இரவு வீட்டின் முன்பு சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி சிவகாா்த்திகேயன் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீஸாா், சிவகாா்த்திகேயனின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

இந் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி, உயிரிழந்த சிவகாா்த்திகேயனின் பெற்றோா், உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

Story image

அவா்களுடன் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் ஹரிஹரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதனால் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.