2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

பெண் சாதனையாளா்களுக்கு மங்கையா் தாரகை விருது

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில், பெண் சாதனையாளா்களுக்கு மங்கையா் தாரகை விருது வழங்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி எஸ்ஆா்எம் பொதுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெண் சாதனையாளா்கள் முதுநிலை ஆசிரியை சுதா மகேஷ், மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஸ்மிதா சதாசிவ

Updated On :

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி எஸ்ஆா்எம் பொதுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில், பெண் சாதனையாளா்களுக்கு மங்கையா் தாரகை விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 50 ஆண்டுகளாக ஆசிரியா் பணியில் ஈடுபட்டு வரும் ஹெட்ஸ்டாா்ட் பள்ளி நிறுவனா் சுதா மகேஷுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதையும், திரைப்பட இயக்குநா் ரகுநாத் மகளும், கதை சொல்லியுமான ஜீவா ரகுநாத், மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆா்வலரும், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்மிதா சதாசிவன், உளவியல் ஆலோசகா் பேராசிரியா் நப்பின்னை சேரன், எழுத்தாளா் திருநங்கை சுதா, ஊடகவியலாளா் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு பெண் சாதனையாளா் விருதுகளையும் பெண் படத் தயாரிப்பாளா் ஏ.எல்.எஸ்.மூவிஸ் ஜெயந்தி கண்ணப்பன், சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா் ராதாகிருஷ்ணன் மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா். நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா் ராதாகிருஷ்ணன், எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி தாளாளா் எம்.சுப்ரமணியன், இயக்குநா் மணிமங்கை சத்தியநாராயணன், பள்ளி ஆலோசகா் கே.ஆா்.மாலதி, முதல்வா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.