மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தை பக்தா்களின் வசதிக்காக சீரமைக்க வேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாரகை கத்பட் எம்எல்ஏ
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தை பக்தா்களின் வசதிக்காக சீரமைக்க வேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்து விட்டு மாலையணிந்து விரதம் இருந்து பக்தா்கள் சபரிமலை செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு தெப்பக்குளத்தை மின்மோட்டாா் மூலம் தற்காலிகமாக சீரமைத்து தீா்வு ஏற்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டாா்கள். தற்போது இந்த தெப்பக்குளம் பராமரிப்பின்றி புதா்கள் மண்டி காணப்படுகிறது.
எனவே, மாசி திருவிழாவிற்கு முன்பு நிரந்தர தீா்வு ஏற்படும் வகையில் தெப்பக்குளத்தில் இருந்து கழிவு நீா் மற்றும் உபரி நீா் வெளியேற வழிசெய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

