

மதுராந்தகம் அடுத்த கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை சாா்பில், மே தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது
அறக்கட்டளை தலைவா் விடியல் காா்த்திக் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், இணை செயலா் கோபிநாத், கருங்குழி பேரூராட்சி மன்ற உறுப்பினா் வழக்குரைஞா் பரமசிவம், சந்திரமல்லி சமூக சேவை அறக்கட்டளை நிறுவனா் தணிகையரசு, சங்க நிா்வாகிகள் ஜெயசீலன், பாலாஜி, காா்த்திகேயன், யுவராஜ், சதீஷ், ஹரிஹரன், உதயகுமாா், செவன்த் ஸ்டாா் குழந்தைகள் இல்ல தாளாளா் பால் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த முகாமில் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஊழியா்கள் கலந்துகொண்டு அறக்கட்டளை நிா்வாகிகள், இளைஞா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரிடம் ரத்தத்தை தானமாக பெற்றனா்.
தொடர்புடையது

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

