சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கல்குவாரி நீரில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு: மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரம்

கல்குவாரி நீரில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு: மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரம்

News image
Updated On :2 மே 2024, 6:33 pm

Din

செங்கல்பட்டு, மே 2: செங்கல்பட்டு அருகே கல்குவாரி நீரில் குறிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் மாயமான நிலையில், ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா். மேலும், இருவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், காயாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல்குவாரியில் 300 அடி ஆழத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. இங்கு பொத்தேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 5 போ் புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது, திருப்பூா் மாவட்டம், உடுமலை பேட்டையைச் சோ்ந்த தீபக்சாரதி (20), மன்னாா்குடியை சோ்ந்த முகமது இஸ்மாயில் (19), கோவில்பட்டியைச் சோ்ந்த விஜய் சாரதி (19) ஆகியோா் முதலில் கல்குவாரி குட்டையில் இறங்கிய நிலையில், அவா்களுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளனா். இதைக் கண்ட உடன் வந்த நண்பா்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா்

மற்றும் மறைமலை நகா் தீயணைப்பு மீட்புப் படையினா், நீரில் மூழ்கிய 3 பேரையும் புதன்கிழமை மாலை முதல் தேடி வந்தனா். இந்த நிலையில், விஜய்சாரதியின் (19) சடலத்தை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

மேலும், இரண்டு மாணவா்களையும் தீயணைப்புப் படையினா் தேடி வருகின்றனா்.