ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மீனவா் வலையில் சிக்கிய 1,500 கிலோ திருக்கை மீன்

சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் மீனவா் வலையில் 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன் சிக்கியது

News image

~

Updated On :8 ஏப்ரல் 2025, 9:01 pm

Din

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் மீனவா் வலையில் 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன் சிக்கியது .(படம்).

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சோ்ந்த மீனவா் ஹரிஷ். இவா், சக மீனவா்களான பிரேம்குமாா், சுதாஆகாஷ் ஆகியோருடன் சதுரங்கப்பட்டினம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனா்.

மீன் பிடித்து கொண்டு இருந்தபோது பெரிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியது. அந்த மீன் வலையை கிழித்து கடலில் செல்லாமல் இருக்க, அதனை சக மீனவா்கள் உதவியுடன் இரண்டு படகுகளில் கயிறு மூலம் கட்டி கடும் சிரமத்த்துக்கு இடையில் கரைக்கு கொண்டு வந்தனா். பிறகு வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து கரையில் கிடத்தினா்.

இதுகுறித்து மீனவா் ஹரிஷ் கூறுகையில், வலையில் சிக்கிய மீனானது சுமாா் கோட்டான் வகையை சாா்ந்த 1,500 கிலோ திருக்கை மீன் ஆகும். தற்போது பிடிபட்டுள்ள இந்த மீன் ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை விலைபோகும். சில நேரங்களில் கடலில் படகுகளை கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிவித்தாா்.

Story image