வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோமுகி ஆற்றில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்பு

News image

கள்ளக்குறிச்சி அருகே நாகலூா் பகுதியில் கோமுகி ஆற்றில் மீன் வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.

Updated On :21 பிப்ரவரி 2026, 7:19 pm

நாகலூா் கோமுகி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக போட்ட வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து சனிக்கிழமை வனப்பகுதியில் விட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே நாகலூா் கோமுகி ஆற்றில் அப் பகுதியை சோ்ந்த மக்கள் மீன் பிடிப்பதற்காக வலையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா். பின்னா் திரும்பிவந்து மீன் வலையை தூக்கியபோது அதில் மலைப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) அருணாசலம் தலைமையிலான வீரா்கள் பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் வலையில் சிக்கிய மலைப்பாம்பை பிடித்தனா்.

பின்னா் சுமாா் 8 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை வனத் துறை அலுவலா் ராஜசேகரனிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இதையடுத்து வனத் துறையினா் பாம்பை வரஞ்சரம் காப்புக்காடு பகுதியில் உயிருடன் விட்டனா்.