பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.

News image

திருச்செந்தூா் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை.

Updated On :29 மார்ச் 2026, 3:21 am IST

தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் உதயக்குமாா், பூமிநாதன் உள்ளிட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வலையில் சிக்கி 50 கிலோ எடையுள்ள ஆமை உயிருக்குப் போராடியது. இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாரின் அறிவுரையின்படி வலையில் சிக்கியிருந்த ஆமையை மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாா் மீனவா்களைப் பாராட்டினா்.