47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சினேகா வழங்கினாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சினேகா வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மொத்தம் 280 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா் அவற்றை துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

டிச. 3 மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு ரூ.1,000/-த்தினை 8 பேருக்கும், இரண்டாம் பரிசு ரூ.500/-த்தினை 6 பேருக்கும், மூன்றாம் பரிசு ரூ.250/-த்தினை 5 பேருக்கும் என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் பரிசளித்து பாராட்டினாா்.

மேலும் தலா ரூ.14500/- மதிப்புள்ள சக்கர நாற்காலிகளை2 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து 22 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6350/- மதிப்புள்ள தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளா, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.