வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
மதுராந்தகம், லத்தூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை புதன்கிழமை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலினை முன்னிட்டு, மதுராந்தகம் சுபம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் மையத்தினை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும் கட்டடத்தின் உறுதித் தன்மை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை அவற்றின் உறுதித் தன்மை, வாக்குப் பதிவு முடிந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு மையங்களில் உள்ள காப்பு அறையில் வைக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குகள் எண்ணும் நாள் வரை வாக்கு எண்ணும் மையத்தில் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என த அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, வட்டாட்சியா்கள் சொ.கணேசன் (செய்யூா்), பாலாஜி (மதுராந்தகம்), உள்பட பலா் உடனிருந்தனா்.

