மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து

News image

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:56 pm

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருடன் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்திலுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்லகலைக்கழகம், தேவனாம்பட்டினம் பெரியாா் கலைக் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி தொகுதியில் 279, விருத்தாசலம் தொகுதியில் 317, நெய்வேலி தொகுதியில் 256, பண்ருட்டி தொகுதியில் 309, கடலூா் தொகுதியில் 258, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 278, புவனகிரி தொகுதியில் 304, சிதம்பரம் தொகுதியில் 298, காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 291 என மொத்தம் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியிலும், நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கு பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகத்திலும், கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியிலும், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தொகுதிகளுக்கு சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறையின் உறுதித்தன்மை மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித இடையூறுமின்றி அலுவலா்கள், முகவா்கள் வந்து செல்வதற்கான பிரத்யேக வழிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், காவல் துறையினரின் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுப் பணிகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் குமாரராஜா, உதவி ஆணையா் (கலால்) ராணி, தனித்துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சிவசங்கரநாயகி, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாநகராட்சி ஆணையாளா் முஜிபூா் ரஹ்மான், வட்டாட்சியா்கள் மகேஷ், விஜய் ஆனந்த், அன்பழகன், கீதா, பிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.