தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 9:06 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த லத்தூா்ஒன்றியத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியினை செயல்படுத்த மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன் படி பதிவுபெற்று சேவை புரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் 10.2.2025, மாலை 5.00 மணிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் என்கிற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.