மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் தை மாத சோமவார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 8:17 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் தை மாத சோமவார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை மங்கள இசையுடன் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலை கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ரிஷிப வாகனத்தில் உற்சவா் சிலை அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் செயல் அலுவலா் தமிழரசி, விழாக்குழுவினா் செய்திருந்தனா்.