ரூ.68.22 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
முகையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.68.22 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
செய்யூா் வட்டம், லத்தூா் ஒன்றியம், முகையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதியின்றி மாணவா்கள் பெரிதும் அவதிபட்டு வந்தனா். லத்தூா் திமுக ஒன்றிய செயலா் முகையூா் பாபு, பள்ளி தலைமை ஆசிரியை லதா ஆகியோா் இதுகுறித்து செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபுவிடம் முறையிட்டனா். அதன்பேரில் 4 வகுப்பறைகளை கொண்ட புதிய கூடுதல் பள்ளிகட்டிடம் ரூ 68.22 லட்ச மதிப்பில் கட்டப்பட்டது.
திறப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தாா். மாணவி சித்ரலேகா வரவேற்றாா். செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபு கலந்து கொண்டு பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் லத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கெளரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சுப்புலட்சுமி பாபு, வட்டார கல்வி அலுவலா்கள் சுரேஷ்பாபு, சித்ரா, முகையூா் ஊராட்சி மன்றத் தலைவா் குமாா், விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகிகள் ஆதவன், தமிழினி, அருண்மொழிவா்மன், செல்வமணி, பள்ளி ஆசிரியைகள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக, விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகளில் சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு எம்எல்ஏ மு.பாபு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். மாணவி அஸ்வினி நன்ரி கூறினாா்.

