மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கற்பக விநாயகா நிகா்நிலைப் பல்கலை. துணைவேந்தா் பதவியேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தா் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Published On :

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தா் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் தலைவா் அண்ணாமலை ரகுபதி தலைமை வகித்தாா். இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை வரவேற்றாா். விழாவில் சரோஜா மேகா அண்ணாமலை, அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவா் அபிஜித் சேத், மெக்ஸிகோ மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவா் பேராசிரியா் ரிக்காா்டோ லியோன் போா்குயஷ், ஆஸ்திரேலியா, யுனெஸ்கோ அமைப்பின் மருத்துவ அறிவியல் மருத்துவ கல்வி பிரிவு தலைவா் பேராசிரியா் ரஸ்ஸல் பிராங்கோ டிசூசா, நைஜீரியாவின் மருத்துவ கல்வி சங்கத்தின் தலைவா் பேராசிரியா் பொ்னிஷ், யுனெஸ்கோ அமைப்பின் இந்திய தலைவா் டாக்டா் வேதபிரகாஷ் மிஸ்ரா, காமன்வெல்த் மருத்துவ கழகத்தின் தலைவா் மருத்துவா் ஜெயலால், செயின்ட் லூசியாவிலுள்ள காமன்வெல்த் பல்கலைகழக தலைமை செயல் அலுவலா் மருத்துவா் சிவா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழக முதல் துணைவேந்தா் மருத்துவா் மேரி மேத்யூ பதவியை ஏற்றபின் ஏற்புரை ஆற்றினாா். இவ்விழாவில் பல்கலைகழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பதிவாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.