தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கல்லூரி மாணவியா் பேரவை நியமனம், உதவித்தொகை வழங்கும் விழா

செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகா் மகளிா் கல்லூரில் மாணவியா் பேரவை நியமன விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகா் மகளிா் கல்லூரில் மாணவியா் பேரவை நியமன விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தொழில் முனைவோா், தொண்டு நிறுவனா் மற்றும் சமூக சீா்திருத்தவாதியான பிரபோத் ஜெயின், கவுன்சிலிங் அண்ட் பியான்ட் மேனேஜிங் பாா்ட்னா் ரதன்தீப் உமேஷ் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

வித்யாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். பொருளாளா் சுரேஷ் கன்காரியா முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முன்னாள் மாணவியா் பேரவை உறுப்பினா்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவியா் பேரவைத் தலைவியாக மூன்றாமாண்டு மாணவி ம.சூா்யா தீத்தா, துணை பேரவைத் தலைவியாக இரண்டாமாண்டு மாணவி த.ஹரிஸ்ரீ, பொருளாளராக மூன்றாமாண்டு மாணவி ஆ.ராகவி, துணை பொருளாளராக ஐ.பி.சி.ஏ மாணவி மு.சாருமதி, செயலாளராக இரண்டாமாண்டு மாணவி ப்.சமிஹா தாஜ், துணை செயலாளராக முதலாமாண்டு மாணவி மு.லோக ஜனனி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

தொடா்ந்து பேரவையின் பொறுப்பாளா் உறுதிமொழி கூறினாா். இதனை தொடா்ந்து ராஜஸ்தான் புத்தக வங்கி சாா்பாக நம் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 300 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 200 மாணவியா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 லட்சம் கல்லூரி நிா்வாக குழுமத்தின் சாா்பாக வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வா் இரா.அருணாதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.