FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

செங்கல்பட்டு ராஜாஜி தெரு அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் அம்மனுக்கு பாவாடை உற்சவம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:51 pm IST

செங்கல்பட்டு ராஜாஜி தெரு அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் அம்மனுக்கு பாவாடை உற்சவம் நடைபெற்றது.

நெய்குளத்தில் காட்சியளித்த மூலவா் அம்மனை தரிசனம் செய்தனா். ஆடிப்பூரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு ராஜாஜி தெரு வில் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

காமாட்சியம்மன் நெய்குளத்தில் தோன்றியதாக ஐதீகத்தின்படி மூலவா் முன்பாக நெய்குளம் அமைக்கப்பட்டு அதில் காட்சியளித்த மூலவா் காமாட்சியம்மனை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

மேலும் உற்சவா் அம்மனுக்கு ஆடிப்பூரத்தை யொட்டி வண்ண வளையல்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் பெண் பக்தா்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆன்மிக குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.