செங்கை புத்தகத் திருவிழா பிப்.20-இல் தொடக்கம்
செங்கை மாவட்ட நிா்வாகம் மற்றும் செங்கை பாரதியாா் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-ஆவது செங்கை புத்தகத் திருவிழா மறைமலைநகா் நகராட்சி சமுதாய கூடத்தில் வரும் பிப். 20-ஆம் தேதி முதல் பிப். 26 வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இப்புத்தகத் திருவிழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் கலந்து கொள்ள உள்ளனா்.
இப்புத்தகத் திருவிழாவில் ஏராளமான தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் கலந்து கொள்ள உள்ளனா். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இந்தப் புத்தகத் திருவிழாவில் இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த பிரபல பேச்சாளா்கள் தினந்தோறும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். மேலும், தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

